Enable Javscript for better performance
அடையாளம் தெரியாதவர் சுட்டு சிஆர்பிஎஃப் வீரர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அடையாளம் தெரியாதவர் சுட்டு சிஆர்பிஎஃப் வீரர் காயம்

    By புது தில்லி,  |   Published on : 26th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடையாளம் தெரியாத இருவர் சுட்டதில் சிஆர்பிஎஃப் வீரர் பலத்த காயமடைந்தார்.

    இது குறித்து தெற்கு தில்லி போலீஸ் உயரதிகாரி கூறியது: தெற்கு தில்லி, ராமகிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் விகாஸ் தோமர் (34). இவர் தில்லியில் மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆப்பிஎஃப்) ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந் நிலையில், இவர் வெள்ளிக்கிழமை காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் இவரது வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து மயக்கமடைந்தார். உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கியால் சுட்டவர்களில் ஒருவர் இவரது மைத்துனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மைத்துனரின் மனைவியுடன் விகாஸ் தோமருக்கு கள்ளத் தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai