Enable Javscript for better performance
ஆன்லைனில் கருத்து கேட்க டிஎம்ஆர்சி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆன்லைனில் கருத்து கேட்க டிஎம்ஆர்சி திட்டம்

    By புது தில்லி,  |   Published on : 26th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயில் சேவை குறித்து வாடிக்கையாளர் திருப்தி குறித்து ஆன்லைனில் கருத்து கேட்க தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.) திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டி.எம்.ஆர்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லி மெட்ரோ ரயில் செயல்பாடுகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டிஎம்ஆர்சி இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ங்ப்ட்ண்ம்ங்ற்ழ்ர்ழ்ஹண்ப்ழ்ஹண்ப்.ஸ்ரீர்ம்) ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை கருத்துத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் தில்லி மெட்ரோ ரயில் பயணம் குறித்த மொத்த கருத்து, மெட்ரோ ரயில்கள் தேவை, பயன்பாடு, ரயில்கள் குறித்த அறிவிப்புகள், பயணத்தின் போது கூறப்படும் அறிவிப்புகள், வாடிக்கையாளர் சேவை, வசதி, கூட்ட நெரிசல், பாதுகாப்பு, பயணத் தகவல் ஆகிய குறித்து மெட்ரோ ரயில் பயணிகள் பங்கேற்று கருத்துகள், புகார்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கலாம்.

    "வாடிக்கையாளர் திருப்தி' குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்கும் இத் திட்டத்தை டிஎம்ஆர்சி முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான கருத்துக் கேட்பு உலகம் முழுவதும் உள்ள பல மெட்ரோ ரயில் சேவை நிறுவனங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக "கோமெட்ட, "நோவா' ஆகிய அமைப்புகள் இணைந்து இத் திட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் நோவா அமைப்பில் டிஎம்ஆர்சி உறுப்பினராக உள்ளது.

    இதே போன்று கடந்த ஆண்டு இறுதியிலும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது. அதில், பயணிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி, ஸ்மார்ட் கார்டுகளில் தரம் உயர்வு, கழிவறை வசதி, வாகன நிறுத்தும் மையங்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு சிறப்பு வசதிகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai