Enable Javscript for better performance
ஏழு வயது சிறுவன் கடத்திக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் கடத்தப்பட்ட ஏழு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

    கிழக்கு தில்லி உஸ்மான்பூரில் வசிப்பவர் முகேஷ். துணி வியாபாரம் செய்துவருகிறார். இந் நிலையில், இவரது ஏழு வயது மகன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குக் கடத்தப்பட்டான். இது தொடர்பாக உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந் நிலையில், அச் சிறுவனின் சடலம் அவரது வீட்டருகே இருந்தது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

    சிறுவனை கடத்தியப் பிறகு அவரது பெற்றோருக்கு பணம் கேட்டு மிரட்டல் எதுவும் வரவில்லை.

    இதனால் முன் விரோதம் காரணமாக அச் சிறுவனைக் கடத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது என்று போலீஸார்

    தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai