Enable Javscript for better performance
தில்லி டிரான்ஸ்கோநிறுவனத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி டிரான்ஸ்கோநிறுவனத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்

    By புது தில்லி  |   Published on : 26th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி டிரான்ஸ்கோ நிறுவனத்தின் தரமான மேலாண்மை அமைப்புக்காக ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அந் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், தில்லி அரசின மின் துறை முதன்மைச் செயலருமான அருண் கோயல் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

    தில்லியில் கூடுதல் உயர் மின்னழுத்த கண்காணிப்பு, பராமரிப்பு, செயலாக்கம் ஆகியவற்றில் தரமான மேலாண்மைக்காக ஐ.எஸ்.ஓ. 9001:2008 சான்று வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தில்லி டிரான்ஸ்கோ நிறுவனத்தின் 32 கள நிறுவலுக்காக ஐ.எஸ்.ஓ. தரச் சான்று 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai