Enable Javscript for better performance
தேர்தல் ஆணையத்துக்கு வணிகர் கூட்டமைப்பு வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் ஆணையத்துக்கு வணிகர் கூட்டமைப்பு வேண்டுகோள்

    By புது தில்லி,  |   Published on : 26th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலையொட்டி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும் வாக்குறுதிகளை, வெற்றி பெறும் அரசியல் கட்சிகள் நிறைவேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

    இது தொடர்பாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

    தேர்தல் சமயங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அக் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றன. இந் நிலையில், தேர்தல் அறிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில், தேர்தல் அறிக்கையை தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது.

    இதன் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகள், தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர்.

    இந் நிலையில், தேர்தல் சமயத்தில் தேர்தல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதையும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை வெற்றி பெறும் கட்சி அல்லது கட்சிகள் நிறைவேற்றுவதையும் தேர்தல் ஆணையும் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai