Enable Javscript for better performance
தொழிற்பேட்டைகளில் தூர்வாரும் பணி: டிஎஸ்ஐஐடிசி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தொழிற்பேட்டைகளில் தூர்வாரும் பணி: டிஎஸ்ஐஐடிசி தகவல்

    By புது தில்லி,  |   Published on : 26th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று தில்லி பிரதேச தொழிற்சாலை உள்கட்டமைப்பு (டிஎஸ்ஐஐடிசி) மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக (டிஎஸ்ஐஐடிசி) தலைவர் அமித் யாதவ் வெள்ளிக்கிழமை கூறியது:

    தில்லியில் பருவமழையின்போது சாலை, தெருக்கள் ஆகியவற்றில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொழிற்சாலை பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து டிஎஸ்ஐஐடிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஜிடி கர்னால் ரோடு, பாத்லி, கீர்த்தி நகர், மங்கோல்புரி, உத்யோக் நகர், நாங்லோயி, ஜில்மில், பட்பர்கஞ்ச், நரெய்ணா, ராஜஸ்தானி உத்யோக் நகர், மோதி நகர், வஸீர்பூர், நரேலா, பவானா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

    மங்கோல்புரி, லாரன்ஸ், மாயாபுரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் விரைவில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணித் தொடங்கப்படும். (டிஎஸ்ஐஐடிசி) மேற்கொண்டுவரும் தூர்வாரும் பணிகளுக்கு தொழிற்சாலை நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இது தொடர்பாக புகார்கள், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai