Enable Javscript for better performance
நல்லவர் கெட்டவர் குறித்து கங்கைத் தாய்க்கு தெரியும்: மோடிக்கு கபில் சிபல் பதிலடி- Dinamani

சுடச்சுட

    

    நல்லவர் கெட்டவர் குறித்து கங்கைத் தாய்க்கு தெரியும்: மோடிக்கு கபில் சிபல் பதிலடி

    Published on : 26th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புனித கங்கை குறித்து பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதற்கு, ""நல்லவர், கெட்டவர் குறித்து கங்கைத் தாய்க்கு வித்தியாசம் தெரியும்'' என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறியதாவது:

    வாராணசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரை உண்மைகளே உள்ளன. அதில் கங்கையை சுத்தப்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் பாயும் சபர்மதி ஆறும் உதாரணம் காட்டப்பட்டுள்ளது.

    தாம் 2001ஆம் ஆண்டு பதவியேற்றபோது இருந்த சபர்மதி ஆற்றின் நிலை, தற்போதைய 2014ஆம் ஆண்டின் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று மோடி கூறியுள்ளார். உண்மையில் கங்கை நதி சந்தித்து வரும் அத்தனை பிரச்னைகளையும் சபர்மதி நதியும் சந்திக்கிறது.

    நல்லவர், கெட்டவர் குறித்த வித்தியாசம் கங்கைத் தாய்க்கு தெரியும். ஆட்சியை பிடிப்பதற்காக வாராணசிக்கு வந்துள்ள மோடி, ஞானம் பெறுவதற்காக அரசைத் துறந்த கெüதம புத்தரைப் பற்றிப் பேசுவது முற்றிலும் நேரெதிரானது.

    குஜராத் அதிர்வலைகள் முற்றிலும் பொய்யான அதிர்வலைகளைக் கொண்டவை. உண்மைகளை திரித்துக் கூறுவதை தனது அன்றாடப் பணியாகச் செய்து வரும் நபரின் நிர்வாகமே இந்த பொய்யான அதிர்வலைகளின் மையம்.

    தாம் கடவுளாக இருந்தால், ஒரே தொடுதலில் கங்கையை சுத்தப்படுத்தி விடுவேன் என்று மோடி கூறியுள்ளார். ஆனால், அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள குஜராத்தில் பாயும் சபர்மதி, காரி, ஆம்லாகாட்டி நதிகளே முற்றிலும் அசுத்தமானவை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது என்று கபில் சிபல் கூறினார்.

    வாராணசி மக்களுக்கு வேண்டுகோள்: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி, வாராணசியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கொள்கைகளுக்கான போராக கருதப்படும் இந்தத் தேர்தலில் காங்கிரஸýக்கு ஆதரவளித்து, வகுப்புவாத சக்திகளை வாராணசி மக்கள் நிராகரிக்க வேண்டும்.

    மோடி வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது கூடிய கூட்டம் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டது. அதனால் தேர்தலில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழும் என்று தோன்றவில்லை.

    ஆம் ஆத்மி பற்றி கருத்து: தில்லியில் ஆட்சி நடத்த வாய்ப்பளிக்கப்பட்டவர்கள் (ஆம் ஆத்மி), தங்களது பொறுப்புகளில் இருந்து விலகி விட்டனர். அத்தகைய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று மணீஷ் திவாரி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai