Enable Javscript for better performance
பத்மநாபசுவாமி கோயில் சொத்து தணிக்கை மேற்பார்வை செய்யத் தயார்: வினோத் ராய்- Dinamani

சுடச்சுட

    

    பத்மநாபசுவாமி கோயில் சொத்து தணிக்கை மேற்பார்வை செய்யத் தயார்: வினோத் ராய்

    By புது தில்லி  |   Published on : 26th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோயில் சொத்துகளை சிறப்புத் தணிக்கை செய்யும் பணியை மேற்பார்வையிடத் தயாராக இருப்பதாக என்று முன்னாள் சிஏஜி (மத்திய தலைமை கணக்குத் தணிகையாளர்) வினோத் ராய் தெரிவித்தார்.

    அக் கோயில் சொத்துகள் தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பணியை ஏற்க வேண்டும் என்று வினோத் ராயை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    இந் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வினோத் ராய் வெள்ளிக்கிழமை கூறுகையில், "பத்மநாபசுவாமி கோயில் சொத்துகள் சிறப்புத் தணிக்கை நடவடிக்கையை மேற்பார்வையிடுவது மிகவும் சவால் நிறைந்த கடினமான பணி. இருப்பினும் எனது திறமை, பணி மீது நம்பிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டதையடுத்து மேற்பார்வைப் பணியை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai