பெங்காலி மார்க்கெட்டில் தீ
By புது தில்லி, | Published on : 26th April 2014 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி பெங்காலி மார்க்கெட்டில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
தில்லி மண்டி ஹவுஸில் பெங்காலி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. பொருள்கள் வாங்குவதற்காக எந்த நேரமும் கூட்டம் அலைமோதும். இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால், தீ வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, கூடுதல் வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள்
வந்தனர்.
மொத்தம் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சேத மதிப்பு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது என்று தீயணைப்புத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
மென்பொருள் நிறுவனத்தில் தீ: தில்லி நேரு பிளேஸில் மென்பொருள் நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கம்ப்யூட்டர்கள், அலுவலக ஆவணங்கள் முழுவதுமாக எரிந்தன.
நேரு பிளேஸில் மூன்று மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள இந் நிறுவனத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் எனறு தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
"தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் அந் நிறுவனத்தின் காவலாளி மற்றும் ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை முழுமையாக அணைத்தனர். யாருக்கும் காயமேற்படவில்லை. கம்ப்யூட்டர்கள், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் உள்ளிட்டவை அனைத்தும் தீயில் முற்றிலும் எரிந்து நாசமடைந்தன' என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.