Enable Javscript for better performance
ராணுவ தலைமை தளபதி நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    ராணுவ தலைமை தளபதி நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக் கூடாது

    By புது தில்லி  |   Published on : 26th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவத் தலைமைத் தளபதி நியமனத்துக்கு ஒப்புதல் தரக் கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெள்ளிக்கிழமை அவர் எழுதிய கடிதம் விவரம்: தேர்தல் நடைபெறும் சமயத்தில், ராணுவ தலைமை தளபதி நியமனம் தொடர்பான முயற்சியை தற்போது உள்ள மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்தப் பணியின் நியமன பாரம்பரியத்துக்கு இது எதிரானது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் ராணுவத் தலைமையகத்தை அரசியல்மயமாக்கும் வகையிலும் பாதுகாப்புப் படையின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்யும் வகையிலும் உள்ளது. எனவே, ராணுவ தலைமை தளபதி நியமனத்துக்கு ஒப்புதல் தரக் கூடாது என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ராணுவ துணை தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாகை ராணுவ தலைமை தளபதியாக நியமிக்க பாதுகாப்புத் துறை, பிரதமர் அலுவலகத்துக்கு அண்மையில் பரிந்துரைத்தது. இப் பரிந்துரைக்கு பிரதமர் தலைமையிலான பணி அமர்வுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    தலைமை தளபதி ஓய்வுபெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர், புதிய தலைமை தளபதியின் பெயரை மத்திய அரசு அறிவிப்பது வழக்கம். இதன்படி, தற்போதுள்ள ராணுவ தலைமை தளபதி ஜெனரல் விக்ரம் சிங் ஜூலை 31-ஆம் ஆம் தேதி ஓய்வுபெறவுள்ளார். இதையடுத்து, தலைமை தளபதி பொறுப்புக்கு பாதுகாப்புத் துறை பரிந்துரைத்துள்ள பெயரை மே 1-ஆம் தேதி அறிவிக்க வேண்டும்.

    தற்போதுள்ள மத்திய அரசின் ஆட்சிக் காலம் நிறைவடையும் நிலையில், ராணுவ தலைமை தளபதி பெயரை பரிந்துரைக்க கூடாது என பாஜக ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பியுள்ளது. இந் நிலையில், பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai