Enable Javscript for better performance
விரக்தியின் காரணமாக மோடி பேரணி குறித்து காங்கிரஸ் புகார்- Dinamani

சுடச்சுட

    

    விரக்தியின் காரணமாக மோடி பேரணி குறித்து காங்கிரஸ் புகார்

    By புது தில்லி  |   Published on : 26th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு தோல்வி ஏற்படும் என்ற விரக்தியின் காரணமாக, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் வாராணசி பேரணி குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர், "வாராணசியில் வேட்புமனு தாக்கல் செய்ய மோடி பேரணியாக சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

    6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அதே தேதியில் வேட்புமனு தாக்கலுக்கான அவகாசத்தை அறிவித்ததும் தேர்தல் ஆணையம்தான். வாக்குப்பதிவு நடைபெறும் போது வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, இது தேர்தல் ஆணையத்தையே காங்கிரஸ் கட்சி குறை கூறுவதைப்போல் உள்ளது.

    மோடியின் பேரணியை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிகள் மீதும் காங்கிரஸ் கட்சி குறை கூறுகிறது. வெற்றிப்படங்களைத்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும், தோல்வியடையும் படங்களையல்ல.

    சட்டத்துக்கு உள்பட்டுதான் வாராணசியில் மோடியின் பேரணி நடைபெற்றது. மோடியின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இது அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி விரக்தியே காரணம்' என்று

    கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai