இந்திய முஜாஹிதீன்கள் இருவரிடம் விசாரிக்க ஒடிசா போலீஸ் திட்டம்
By புது தில்லி | Published on : 27th April 2014 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகளான தெஹ்சீன் அக்தர், வாகாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக ஒடிசா மாநில போலீஸ் தனிப் படை வரும் வாரம் தில்லி வரத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தில்லி போலீஸ் உயரதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தெஹ்சீன் அக்தர், வகாஸ் ஆகியோரை கடந்த மாதம் நாங்கள் கைது செய்தோம். விசாரணையில் அவர்கள் ஓடிசாவில் சில ஹோட்டல்களில் சில நாள்கள் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. ஆனால், அங்கு எதற்காக சென்றார்கள் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க முடியவில்லை. இதையடுத்து, இம் மாத தொடக்கத்தில் இருவரையும் புவனேசுவரத்துக்கு கொண்டு சென்றோம். அங்கு ஒடிசா மாநில போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தெஹ்சீனையும் வகாûஸயும் விசாரித்தோம்.
இதன் தொடர்ச்சியாக இருவரிடமும் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி ஓடிசா போலீஸ் கோரியுள்ளது. புவனேசுவரத்தில் இரு பயங்கரவாதிகளும் தங்கியிருந்ததால் அப் பின்னணி குறித்து ஆராய ஒடிசா போலீஸ் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
அது தொடர்பான விசாரணைக்காகவே அடுத்த வாரம் அம் மாநில போலீஸார் தில்லி வரத் திட்டமிட்டுள்ளனர்' என்று உயரதிகாரி கூறினார்.