Enable Javscript for better performance
கடைக்காரரை சுட்டதாக பிஎஸ்பி கவுன்சிலர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கடைக்காரரை சுட்டதாக பிஎஸ்பி கவுன்சிலர் மீது வழக்கு

    By புது தில்லி,  |   Published on : 27th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடைக்காரரைத் துப்பாக்கியால் சுட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) கவுன்சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: வடமேற்கு தில்லி, அமன் விஹாரில் உள்ள பிரேம் நகரில் வசித்துவருபவர் புஷ்பராஜ். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அவர் கவுன்சிலராக உள்ளார். சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார்.

    இவர் கவுன்சிலர் புஷ்பராஜ் வீட்டருகே கட்டுமானத் தளவாடங்கள், பொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். அப் பகுதியில் உள்ளவர்களுக்கும் அவற்றை விநியோகம் செய்துவருகிறார்.

    பகல் நேரங்களில் அப் பகுதியில் சரக்கு லாரிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், அப் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு கட்டுமானப் பொருள்களை டிரக்கில் அனுப்பிவைத்தார். அந்த டிரக் புஷ்பராஜின் வீட்டருகே நின்றபோது இருவருக்கும் தகராறு வந்தது.

    இந் நிலையில், வியாழக்கிழமை இரவு கடைக்கு வெளியே டிரக்கை வினோத் குமார் நிறுத்தியிருந்தார். அதைப் பார்த்து அங்கு வந்த புஷ்பராஜ், டிரக்கை அகற்றும்படி கூறினார்.

    இதைத் தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வினோத் குமாரை நோக்கி புஷ்பராஜ் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். தொடையில் குண்டு பாய்ந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அமன் விஹார் காவல் நிலையத்தில் கவுன்சிலர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai