Enable Javscript for better performance
கனாட் பிளேஸில் உணவகங்களை இரவு 1 மணி வரை திறக்கத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கனாட் பிளேஸில் உணவகங்களை இரவு 1 மணி வரை திறக்கத் திட்டம்

    By புது தில்லி  |   Published on : 27th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள உணவகங்களைத் திறக்க தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இரவு 11 மணி என்பதை நள்ளிரவு ஒரு மணி வரை நீட்டிக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

    எனினும், இது தொடர்பான பரிந்துரை தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால், அவரது முடிவே இறுதியானது என்று கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர். புது தில்லியின் இதயம் என கருதப்படும் கனாட் பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், ஜவுளி, மின்னணு சாதனம், புத்தகம், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட கடைகள் ஏராளமாக உள்ளன. புது தில்லி வரும் வெளிநாட்டுப் பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று பல்வேறு பொருள்களை வாங்க ஆர்வம் காட்டுவர்.

    இங்குள்ள இன்னர் சர்க்கிள், அவுட்டர் சர்க்கிள் ஆகிய பகுதியில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளதால், காலை முதல் இரவு வரை எப்போதும் கூட்டமும் நிரம்பியிருக்கும்.

    இதனால், ஹோட்டல்களைத் திறக்க தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இரவு 11 மணி என்ற கால வரம்பை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவாவை கனாட் பிளேஸ் வியாபாரிகள் கடந்த வாரம் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த ஜலஜ் ஸ்ரீவாஸ்தவா இதற்கான பரிந்துரையை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த விவரம் வியாபாரிகளுக்கு சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள வியாபாரிகள், நள்ளிரவு 1 மணி வரை ஹோட்டல்கள் திறக்கப்பட்டால், அவசரகதியில் தங்கள் கடைகளுக்கு வந்துவிட்டு செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளது என நம்புகின்றனர். இதற்கிடையே, நள்ளிரவு 1 மணி வரை ஹோட்டல்களைத் திறக்க அனுமதி அளிப்பதால் சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு ரீதியிலான பிரச்ûனையையும் கனாட் பிளேஸ் பகுதி சந்திக்க நேரிடும் என்று தில்லி போலீஸ் கருதுகிறது.

    இதைத் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கவனத்தில் கொண்டுள்ளதால், போலீஸ் தரப்பு கருத்தை அறிந்த பிறகே புது தில்லி முனிசிபல் கவுன்சில் பரிந்துரை மீது முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai