Enable Javscript for better performance
குடிநீர் இணைப்பு குழாய் சேதம் டிஎம்ஆர்சி மீது எஃப்ஐஆர் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் இணைப்பு குழாய் சேதம் டிஎம்ஆர்சி மீது எஃப்ஐஆர் பதிவு

    By புது தில்லி,  |   Published on : 27th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு தில்லிக்கு செல்லும் முக்கிய குடிநீர் இணைப்புக் குழாயை சேதப்படுத்தியதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) மீது தில்லி ஜல் போர்டு நிர்வாகம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    தில்லி நஜஃப்கர் பகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு எதிரே மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில், வியாழக்கிழமை பணியின் போது, அங்குள்ள முக்கிய குடிநீர் இணைப்புக் குழாய் சேதமடைந்தது. இதனால், மேற்கு தில்லியில் ஒரு பகுதிக்கு குடிநீர் விநியோகம் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் தடைப்பட்டது. இது தொடர்பாக தில்லி ஜல் போர்டு சார்பில் டிஎம்ஆர்சி மீது ரஜெüரி கார்டன் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

    "டிஎம்ஆர்சியின் கவனக் குறைவு காரணமாக ஹைதர்புர் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் முக்கிய குடிநீர் இணைப்புக் குழாய் சேதமடைந்துள்ளது. இது முதல்முறை அல்ல. இது போன்று ஜல் போர்டு அமைத்துள்ள குடிநீர் இணைப்புக் குழாய்கள் பலமுறை சேதமடைந்துள்ளன' என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது குறித்து டிஎம்ஆர்சி செய்தித் தொடர்பாளர் அனுஜ் தயால் கூறுகையில், "கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது, ஜல் போர்டு அமைத்த குடிநீர் இணைப்புக் குழாய் வியாழக்கிழமை மதியம் சேதமடைந்தது.

    எனினும், அவற்றை தில்லி ஜல் போர்டு அதிகாரிகளின் ஆலோசனைப்படி வெள்ளிக்கிழமை காலை முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai