Enable Javscript for better performance
டிடிஇஏ பள்ளி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) மந்திர் மார்க் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    டிடிஇஏ, பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஆகியவை சார்பில் தில்லி ஆராம்பாக் பகுதியில் உள்ள மகாராஷ்டிர ரங்யான் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளி முதல்வர் எம்.கல்யாண்ராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினராக தில்லி அரசு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் டாக்டர் பி.ராமசுவாமி கலந்துகொண்டார்.

    அதன்பின் மாணவ, மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பி.ராமசுவாமி வழங்கினார்.

    இந் நிகழ்ச்சியில் டிடிஇஏ தலைவர் சூரியநாராயணன், செயலாளர் ஆர்.ராஜு, இணைச் செயலாளர் மாரியப்பன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் வெங்கட சுப்பிரமணியம், செயலாளர் ஆறுமுகம், டிடிஇஏ பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மம்தா அகர்வால் நன்றி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai