Enable Javscript for better performance
\\\"டிடிஇஏ மாணவர்களுக்கு சாலை விதிகள் விழிப்புணர்வு பயிற்சி\\\'- Dinamani

சுடச்சுட

    

    "டிடிஇஏ மாணவர்களுக்கு சாலை விதிகள் விழிப்புணர்வு பயிற்சி'

    By புது தில்லி  |   Published on : 27th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டிடிஇஏ (தில்லி தமிழ்க் கல்விக் கழகம்) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று அதன் செயலர் ஆர். ராஜு தெரிவித்தார்.

    தில்லி பூசா ரோடில் உள்ள டிடிஇஏ மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை விதிகள் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தில்லி போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குச் சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    அப்போது அதிகாரிகள் பேசுகையில், "உலகிலேயே இந்தியாவில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. தில்லியில் மட்டும் ஆண்டுக்கு 2,000 பேர் சாலை விபத்துகள ôல் உயிரிழக்கின்றனர். இன்றைய சூழலில் அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, சாலை விதிகளை மதிக்காமல் செல்வோரை கண்டுபிடித்துத் தண்டிக்க முடியும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். காரில் செல்லும்போது குழந்தைகளைப் பின்புறத்தில் அமரச் செய்ய வேண்டும். சாலைகளை "ஜீப்ரா' கிராசிங்கில்தான் கடக்க வேண்டும். மேம்பாலங்களையும் சுரங்கப்பாதைகளையும் பயன்படுத்த வேண்டும்' என்றார்.

    நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய டிடிஇஏ செயலர் ராஜு, "இதுபோன்ற விழிப்புணர்வு மாணவ, மாணவிகளுக்கு கண்டிப்பாகத் தேவை. வரும் காலத்தில், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்' என்றார். இந் நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai