Enable Javscript for better performance
டிடிசி பஸ் ஊழியர்களுக்கு உடல்நல பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    டிடிசி பஸ் ஊழியர்களுக்கு உடல்நல பரிசோதனை முகாம்

    By புது தில்லி,  |   Published on : 27th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன் (டிடிசி) ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உடல்நலப் பரிசோதனை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதய நோய், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களைக் கண்டறிய இம் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து டிடிசி உயரதிகாரி கூறுகையில், "இந்த உடல் நலப் பரிசோதனை முகாம், ஒவ்வொரு பணி மனைக்கும் ஏற்ப வெவ்வேறு நாள்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியாளர்களுக்கு ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால், உடனே சிகிச்சைக்காக அவர் மருத்துவ நிபுணர்களிடம் அனுப்பி வைக்கப்படுவர்' என்றார்.

    தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் இருந்தபோது, 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பார்வைக் குறைபாடுடன் பணியை மேற்கொண்டு வருவதாகவும் பலர் போலி மருத்துவச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai