Enable Javscript for better performance
தில்லியில் பிகார் மஹோத்ஸவம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் புது தில்லியில் மூன்று நாள் கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியான "பிகார் மஹோத்ஸவம்' சனிக்கிழமை தொடங்கியது.

    தில்லி இந்திரப்ரஸ்தாவில் உள்ள ரவீந்திர பவனில் நடைபெறும் இந் நிகழ்ச்சியை பிகார் கலை, பண்பாடு மற்றும் இளைஞர் நலத் துறை, சங்கீத நாடக அகாதெமி, பிகார் லலித் கலா அகாதெமி ஆகியவை இணைந்து நடத்திவருகின்றன.

    இந் நிகழ்ச்சியில் அம் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற யக்ஷி சிலை மாதிரி வடிவம், கோல் கார், மனேர் ஷெரீப் ஸ்தூபி போன்ற நினைவுச் சின்னங்களின் புகைப்படக் கண்காட்சி, மதுபனி ஓவியங்கள் ஆகியவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், அம் மாநில மக்களின் பாரம்பரிய உணவு வகைகளான சுதா-தஹி, லித்தி ஜோக்கா போன்றவை, பார்வையாளர்களை கவரும் வகையில் நாட்டுப்புற நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இது குறித்து பிகார் கலை, பண்பாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை செயலாளர் சஞ்சல் குமார் கூறுகையில்,

    "எங்கள் மாநில கலாசார அடையாளத்துடன் நாட்டின் தலைநகருக்குள் நுழைந்துள்ளோம். இந் நிகழ்ச்சி எங்கள் மாநில வளர்ச்சிக்குப் பாலமாக இருக்கும் என நம்புகிறேன்.

    இதன் மூலம் பிகார் மாநில கலை, கலாசாரம், இசை, உணவு, கைவினைப் பொருள்கள் போன்றவற்றை மற்றவர்களும் அறிய வாய்ப்பாக இருக்கும்.

    இதுபோன்ற நிகழ்ச்சி 2009-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறோம். இதுவரை கொல்கத்தா, அலகாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நடத்தியுள்ளோம். இப்போது புது தில்லியில் நடத்துகிறோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai