Enable Javscript for better performance
மெட்ரோ ரயில் பயணிகளிடம் திருடியதாக 6 பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ ரயில் பயணிகளிடம் திருடியதாக 6 பெண்கள் கைது

    By புது தில்லி,  |   Published on : 27th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் நகை, பணம் ஆகியவற்றைத் திருடிய 7 பெண்கள் அடங்கிய கும்பல் சிக்கியது.

    தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் தில்லி, குர்கான், ஃபரீதாபாத், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள 134 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் ஜேப்படி திருட்டில் பெண்கள் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் ஜேப்படி திருட்டில் ஈடுபட்டதாக 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 118 பேர் (94 சதவீதம்) பெண்கள். இதே போல் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் ஜேப்படி திருடர்கள் 466 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 421 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேப்படி திருட்டு ஒருங்கிணைப்பில் 90.43 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். தேசிய தலைநகர் வலயப் பகுதி பொதுப் போக்குவரத்து அமைப்பை தங்களது வாழ்வாதாரத்திற்கான முக்கியத் தளமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந் நிலையில், தில்லி மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் விலையுயர்ந்த பொருள்கள், நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றைத் திருடியதாக பாரகம்பா ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 7 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஷர்தா, பார்வதி, ரோஷ்னி, ரிதா, ரேணு, நிஷா, பூனம் ஆகியோர் எனத் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.6.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. இதில் ரேணு, ரோஷ்னி பார்வதி ஆகிய மூவர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாக ரயில்வே காவல் துணை ஆணையர் சஞ்சய் பாட்டியா தெரிவித்தார். "ஜேப்படி திருட்டில் ஈடுபடும் பெண்கள் ரயில் பெட்டிகளில் கையில் குழந்தையுடன் பயணிக்கின்றனர். இதனால், சக பயணிகள் சந்தேகிக்க முடியாமல் போய்விடுகிறது.

    இதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பயணிகளின் உடைமைகளைத் திருடி விடுகின்றனர். இதையடுத்து, பெண் ஜேப்படி திருடர்களைப் பிடிப்பதற்காக சாதாரண உடைகளில் சிஐஎஸ்எஃப் பெண் போலீஸார் ரயில் நிலையங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai