Enable Javscript for better performance
ரோஹிணி சிறையில் விசாரணைக் கைதி கொலை- Dinamani

சுடச்சுட

    

    தில்லி புறநகர்ப் பகுதியில் உள்ள ரோஹிணி சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த ராஜ்வீந்தர் (49), சக கைதிகள் மூவரால் தாக்கிக் கொல்லப்பட்டார்.

    இது குறித்து போலீஸார் கூறியது: தில்லி ஸ்வரூப் நகரைச் சேர்ந்தவர் ராஜ்வீந்தர். ஜஹாங்கீர்புரி பகுதியில் நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இச் சிறையில் 6-ஆவது வார்டில் விசாரணைக் கைதியாக ஏப்ரல் 16-ஆம் தேதி அடைக்கப்பட்டார்.

    இந் நிலையில், அவரை சக கைதிகளான ஆஷு, அமித், மன்ப்ரீத் ஆகிய மூவரும் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு எல்என்ஜிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சனிக்கிழமை காலையில் உயிரிழந்தார். இது குறித்து சமைப்புர் பத்லி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறுகிறது.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்ப்ரீத்துக்கு எதிரான கொலை வழக்கில் ராஜ்வீந்தர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து, இக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai