Enable Javscript for better performance
வழக்குரைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லியில் 12 மாடிக் குடியிருப்பில் இருந்து குதித்து வழக்குரைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து போலீஸார் கூறியது: தெற்கு தில்லி, சரிதா விஹார் டிஎல்எஃப் டவரில் வசித்து வந்தவர் சஞ்சய் கோச்சார் (52). வழக்குரைஞரான அவர், அக் குடியிருப்பில் 12-ஆவது மாடியில் இருந்தார். இந் நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார். பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அவரது வீட்டில் தற்கொலை தொடர்பாக கடிதம் ஏதும் எழுதிவைக்கவில்லை. அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai