Enable Javscript for better performance
இன்று வடக்கு தில்லி மேயர் தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மேயர் தேர்தல் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) நடைபெறுகிறது.

    மாநகராட்சியின் மேயர், நிதியாண்டின் முதலாவது கூட்டத் தொடரில் ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாநகராட்சியின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில், மேயர் பதவி முதல் ஆண்டில் பெண்களுக்கும், 2-ஆவது ஆண்டில் பொதுப் பிரிவினருக்கும், 3-ஆவது ஆண்டில் தாழ்த்தப்பட்டோருக்கும் (தனி), 4, 5-ஆவது ஆண்டுகளில் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, வடக்கு தில்லி மாநகராட்சித் தலைமை அலுவலகம் அமைந்துள்ள டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி சிவிக் சென்டரில் மாநகராட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

    இதனிடையே, வடக்கு தில்லி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நிறைவடைந்தது. மேயர் பதவிக்கு யோகேந்திர சந்தோலியா (பாஜக), துணை மேயர் பதவிக்கு ரவீந்திர குப்தா (பாஜக) ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மேயராக யோகேந்திர சந்தோலியா, துணை மேயராக ரவீந்திர குப்தா ஆகியோர் போட்டியின்றி முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    மாநகராட்சி நிலைக் குழுவில் காலியாக உள்ள 3 உறுப்பினர்களின் பதவிக்குரேகா குப்தா (பாஜக), சஞ்சீவ் குமார் (பாஜக), பிருத்வி சிங் ராத்தோர் (காங்கிரஸ்) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai