Enable Javscript for better performance
கொலை வழக்குகளில் தேடப்பட்ட இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

    இது குறித்து தில்லி மேற்கு மாவட்ட கூடுதல் ஆணையர் ரண்வீர் சிங், செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஜார்க்கண்ட மாநிலம், பாஸியா காவல் நிலைய துணை ஆய்வாளர் நரேஷ் பிரசாத் தில்லி காவல் நிலையத்தை ஏப்ரல் 26-ஆம் தேதி தொடர்பு கொண்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கொலை வழக்குகள் தொடர்பாகத் தேடப்படும் இருவர் தில்லியில் பதுங்கி இருப்பதாக அப்போது தெரிவித்தார்.

    இதையடுத்து, தில்லி நிஹால் விஹார் துணை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் படை அங்கு சென்றது. அப்போது, ஜார்க்கண்ட் போலீஸார் தெரிவித்த அங்க அடையாளங்கள் உள்ள இருவர் அங்கு வந்தனர். போலீஸாரைக் கண்டதும் ஓடத் தொடங்கிய அவர்களை விரட்டிச் சென்று கைது செய்தனர்.

    அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம், பத்தூராவைச் சேர்ந்த ராம் வினய் சாஹு (27), அசோக் சிங் (எ) ஹர்க்கு சிங் (20) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் மீது கொலை வழக்கு உள்ளது என்றும், ராம் வினய் சாஹு மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டது குறித்து ஜார்க்கண்ட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் ரண்வீர் சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai