Enable Javscript for better performance
சாலையில் இருந்த பையில் பிரிட்டன் இளைஞர் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் இருந்த பையில் பிரிட்டன் இளைஞர் சடலம்

    By புது தில்லி  |   Published on : 28th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஜங்புரா அருகே சாலையில் இருந்த பையில் தலையில் காயங்களுடன் பிரிட்டன் இளைஞர் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

    ஜங்புரா அருகேயுள்ள போஹல் சர்ச் சாலையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், அப் பையை திறந்து பார்த்தனர். அதில் தலையில் காயங்களுடன் ஒரு ஆண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் பிரிட்டனைச் சேர்ந்த ரோடிக் ஆண்ட்ரு ரேமண்ட் (40) என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai