Enable Javscript for better performance
டிஎம்ஆர்சி பொறியாளர்களுக்கு மலேசியாவில் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    டிஎம்ஆர்சி பொறியாளர்களுக்கு மலேசியாவில் பயிற்சி

    By புது தில்லி  |   Published on : 28th April 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுரங்கம் துளையிடும் இயந்திரங்களில் உள்ள நவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காகவும் அது தொடர்பாக பயிற்சி பெறுவதற்காகவும் அதன் பொறியாளர்கள் அடுத்த மாதம் மலேசியா செல்லவுள்ளனர்.

    இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.) தலைமை நிர்வாக இயக்குநர் மங்கு சிங் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆவது கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், மொத்தம் உள்ள 143 கிலோ மீட்டர் திட்டப் பணிகளில் 53 கிலோ மீட்டர் தொலைவுக்கு பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, 35 சுரங்கம் அமைக்கும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந் நிலையில், பூமிக்கு அடியில் மேற்கொள்ளப்படும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் பயன்படுத்தப்படும் சுரங்கம் துளையிடும் இயந்திரங்களில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தில்லி மெட்ரோ ரயில் பொறியாளர்களுக்கு சர்வதேச அளவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள "தி டனல் டிரெயினிங் அகாதெமி' எனும் பயிற்சி நிறுவனத்துடன் டிஎம்ஆர்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, "கட்டிங் வீல் எரக்ஷன்', "எரக்ஷன் ஸ்டிமுலேட்டர்' "கேப் ஃபில்லிங்', ஷார்ட் கிரியேட்டிங்' ஆகியவற்றுக்கான பிரத்யேக பயிற்சிகளை அந் நிறுவனத்தில் தில்லி மெட்ரோ ரயில் பொறியாளர்கள் பெறுவர்.

    இதற்காக, தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் பி.கே. கர்க் கோலாலம்பூரில் உள்ள பயிற்சி நிறுவனத்துக்கு அண்மையில் சென்று வந்தார். இதையடுத்து, முதல் குழுவில் "இடம்பெற்றுள்ள 10 பொறியாளர்களும் கோலாலம்பூருக்கு அடுத்த மாதம் செல்வார்கள்.

    இது வரை கோலாலம்பூர் பயிற்சி நிறுவனம் சர்வதேச அளவில் 508 பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. வருங்காலத்தில் தில்லியில் டிஎம்ஆர்சி சார்பில் சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை பயன்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பான பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai