Enable Javscript for better performance
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு 50 கூடாரங்கள் - Dinamani

சுடச்சுட

    

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு 50 கூடாரங்கள்

    By புது தில்லி,  |   Published on : 28th April 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தெற்கு தில்லி, வசந்த் குஞ்ஜ் - மசூத்பூரில் காலனிப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கு வசதியாக அப் பகுதியில் 50 தாற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு நிவராணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 500 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. அதிருஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. தீக்காயமடைந் 8 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கதப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தீ விபத்து ஏற்பட்ட பகுதியை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நிவராணப் பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவது உள்பட பல்வேறு நிவராணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இது குறித்து புது தில்லி துணை ஆணையர் அமேயா அபயங்கர் கூறியது: மசூத்பூரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட காலனிப் பகுதியில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்குவதற்கு வசதியாக உடனடியாக 50 தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 10 முதல் 15 லாரிகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி சார்பில் 25 நடமாடும் கழிப்பறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீ விபத்தால் உருக்குலைந்த குடிசைப் பகுதிகளில் உள்ள இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    அப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துணை ஆணையர் தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள், 3 ராணுவ வீரர்கள் அடங்கிய போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி மருத்துவக் குழுவும் சம்பவ இடத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai