Enable Javscript for better performance
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை

    By புது தில்லி  |   Published on : 28th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதாலும் அரசுத் தரப்பில் சாட்சிகள் ஆஜராகததாலும் குற்றம்சாட்டப்பட்ட நபரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஹரியாணாவைச் சேர்ந்த லாப் சிங் என்பவர் தில்லி நாங்லோய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3.60 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் நாங்லோய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் லாப் சிங்கை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணையின் போது, "புகார்தாரரை (பெண்) வேலை வாங்கித் தருவதாக லாப் சிங் ஏமாற்றினார். மேலும், 2013, மே 1-ஆம் தேதி பாலியல் பலாத்காரமும் செய்தார்.

    மேலும், இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டவும் செய்தார். இது தொடர்பாக நாங்லோய் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில் லாப் சிங் கைது செய்யப்பட்டார்' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இரு தரப்பு வழக்கு விசாரணைக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நிவேதிதா அனில் அளித்த உத்தரவு: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்களை அளிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நேரில் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் சார்பில் புகார்தாரருக்கு (பெண்) சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை.

    கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி நீதிமன்ற விடுமுறையின்போது புகார்தாரார் நீதிமன்றத்திற்கு வந்துசென்றுள்ளார். அதன் பிறகு அவர் நீதிமன்றத்தின் விசாரணயில் ஆஜராகவில்லை. போலீஸார் அவரது வீட்டில் சென்று பார்த்ததாகவும் வீடு பூட்டிக்கிடப்பதாகவும் கூறுகின்றனர். ஆகவே, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட நபர் மிரட்டியதாகவோ பாலியல் பலாத்காரம் செய்ததாகவோ உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் வழக்குக்கு வலுசேர்க்கும் சாட்சிகளையும் அளிக்கவில்லை. எனவே, குற்றம்சாட்டப்பட்டவரை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது' என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai