Enable Javscript for better performance
பிளஸ்-1 மாணவர் குத்திக் கொலை:மூவருக்கு போலீஸ் வலைவீச்சு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ்-1 மாணவர் குத்திக் கொலை:மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

    By புது தில்லி,  |   Published on : 28th April 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லியில் பிளஸ்-1 மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: தெற்கு தில்லி பாதர்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஓம்பிரகாஷ். இவரது மகன் லலித் குமார். அப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்துவந்தார்.

    இந் நிலையில், சனிக்கிழமை இரவு பொருள்கள் வாங்குவதற்காக லலித் குமார் வெளியில் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர் மறைவான பகுதியில் வைத்து அவரை கத்தியால் பல முறை குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அப் பகுதிக்குச் சென்றவர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சென்ற ரத்த வெள்ளத்தில் கிடந்த லலித் குமாரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து லலித்குமாரின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "எங்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஜானி என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்துதான் எனது மகனைக் கொன்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜானியின் நண்பர் கெüதம் எனது மகனைத் தாக்கினார்' என்றார்.

    போலீஸ் உயரதிகாரி கூறுகையில், "இக் கொலை சம்பவம் குறித்து பதர்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai