Enable Javscript for better performance
மகன் கொலை வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    : தில்லியில் மகன் கொலை வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, "ஹைதர்பூரைச் சேர்ந்தவர் சீதா ராம் (70). இவரது மகன் நரேஷ் குமார். இவருக்கும் மது, கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்தது. வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி பொழுதைப் போக்கிவந்தார். பெற்றோரிடம் செலவுக்குப் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இந் நிலையில், 2012, ஜூன் 18-ஆம் தேதி இரவு வீட்டில் நரேஷ் குமார் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் பணம் கேட்டு வீட்டில் தாயை நரேஷ் குமார் அடித்துத் துன்புறுத்தியதும், அப்போது, வீட்டில் இருந்த சீதா ராம் தனது மகனை அடித்துக் கொன்றதும் தெரியவந்தது' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தர் குமார் கோயல் அளித்த தீர்ப்பு: குற்றம்சாட்டப்பட்ட சீதா ராம், தனது மகன் நரேஷ் குமாரைக் கொலை செய்தது சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

    முன்னதாக, "நான் என் மகனை கொலை செய்யவில்லை. போலீஸார் என் மீது பொய் வழக்கு ஜோடித்துள்ளனர்' என்று சீதா ராம் முறையிட்டார். அவரது வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai