Enable Javscript for better performance
வங்கிக் கொள்ளை: தேடப்பட்ட \\\"சோட்டா டான்\\\' கைது- Dinamani

சுடச்சுட

    

    வங்கிக் கொள்ளை: தேடப்பட்ட "சோட்டா டான்' கைது

    By புது தில்லி,  |   Published on : 28th April 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல மாநிலங்களில் வங்கிகளில் கொள்ளையடித்த இன்ட்ஜர் (எ) "சோட்டா டான்' கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து தில்லி கூடுதல் காவல் ஆணையர் (குற்றப்பிரிவு) ரவீந்திர யாதவ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே உள்ள சிண்டிகேட் வங்கியில் ரூ. 1.06 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் நிகழ்ந்த இக் கொள்ளை குறித்து ஆதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உத்தர பிரதேச மாநிலம், காகர்லாவைச் சேர்ந்த இன்ட்ஜர் (எ) சோட்டா டான் (32) தலைமையில் ஒரு கும்பல் இக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கர்நாடக போலீஸார் தேடியும் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இந் நிலையில், தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் இக் கும்பல் தன் கைவரிசையை காட்டியதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கும்பலைப் பிடிக்க தில்லி போலீஸாரின் உதவியை நாடினர்.

    இதையடுத்து, துணை காவல் ஆணையர் பீஷம் சிங் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் கேபிஎஸ் மல்ஹோத்ரா கண்காணிப்பின் கீழ் ஆய்வாளர் குல்பீர் சிங் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

    இந் நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில், தில்லி கஷ்மீரி கேட் அருகே சோட்டா டான் ஏப்ரல் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே உள்ள சிண்டிகேட் வங்கியில் கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும், தில்லி கஷ்மீரி கேட் அருகே உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

    2003-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், முராதாபாத் அருகே ஒரு வங்கியில் கொள்ளையடித்து விட்டு காவலாளியைக் கொலை செய்த வழக்கில் சோட்டா டான் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கிலிருந்து வெளியே வந்தார்.

    அதன் பிறகு சொந்த ஊரில் வேலையில்லாமல் இருந்த இளைஞர்களைக் கண்டறிந்து தன் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டார்.

    அவரது ஆலோசனையின் பேரில் அதன் பிறகு அவர்கள் அனைவரும் காய்கறி, பழங்கள் கொண்டு செல்லும் லாரிகளில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.

    பல மாநிலங்களுக்குச் சென்ற அவர்கள், வங்கிகளில் கொள்ளையடித்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல தாதா தாவூத் இப்ராஹிம் போல் தோற்றம் இருந்ததால் இன்ட்ஜரை, "சோட்டா டான்' என்று அப் பகுதி மக்கள் அழைத்தனர்.

    இந்தியாவில் மிகப் பெரிய தாதாவாக உருவாக வேண்டும் என்ற நோக்கில் அவர் செயல்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார் ரவீந்திர யாதவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai