Enable Javscript for better performance
ஹெராயின் கடத்தல்: 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக தில்லியைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக தில்லி காவல் துறையின் (சிறப்புப் பிரிவு) துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியது: போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய தில்லியைச் சேர்ந்த ராம் அவதார் (72), அவரது மகன் பங்கஜ் (38), கிரிதாரி லால் (43), சங்கீதா (27), இந்தர் குமார் சிங் (20) ஆகிய 5 பேரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். தில்லி திலக் நகர் மார்க்கெட் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அப் பகுதியில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடியவர்க விசாரிக்கப்பட்டனர். அப்போது, ஒரு பெண் அங்கிருந்த இருவரிடம் துணிப் பையை அளித்தார். அப் பையை போலீஸார் வாங்கிச் சோதனையிட்டனர். அதில், 5,600 சிறிய பாக்கெட்டுகள் இருந்தன.

    அதில் ஹெராயின் இருந்தது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப் பெண் (சங்கீதா), அவருடன் இருந்த ராம் அவதார், கிரிதாரி லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் கடத்தலில் தொடர்புடைய பங்கஜ், இந்தர் குமார் சிங் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சர்வதேச சந்தையில் ரூ. 65 கோடி மதிப்புள்ள 17.5 கிலோ ஹெராயின், 4 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai