Enable Javscript for better performance
ஆதரவற்ற சிறாருக்கு சிறப்பு நலத் திட்டங்கள்: தில்லி அரசு அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆதரவற்ற சிறாருக்கு சிறப்பு நலத் திட்டங்கள்: தில்லி அரசு அறிவிப்பு

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூகத்தில் பின்தங்கிய, கைவிடப்பட்ட சிறார்களுக்கு சிறப்பு நலத் ட்டங்கள், புனரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, தில்லி அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் செüம்யா குப்தா திங்கள்கிழமை கூறியது: இத் திட்டத்தின்படி கிங்ஸ்வே கேம்பில் செயல்பட்டு வரும் சேவா குதிர் காம்ப்ளக்ஸ் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு "எம்பவர் பிரகதி' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது போல, சகர்பூர், ஜஹாங்கீர்புரி, மங்கோல்புரி, தில்ஷாத் கார்டன் ஆகிய பகுதிகளில் தேசிய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பயிற்சி மையத்தின் (என்.ஐ.இ.எல்.ஐ.டி.) உதவியுடன் பின்தங்கிய பிரிவு பெண்களுக்கு 3 மாத கம்யூட்டர் பயிற்சி, டேட்டா

    என்ட்ரி பயிற்சி அளிக்கப்பட்டுவருகின்றன. பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் அந்த மையம் ஏற்படுத்தித் தரும் என்றார் செüம்யா குப்தா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai