Enable Javscript for better performance
ஆம்ஆத்மி கட்சியிலிருந்து காஸ்மி விலகல்- Dinamani

சுடச்சுட

    

     ஆம்ஆத்மி கட்சியிலிருந்து அக் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினரான மெüலானா மக்சூத் அலி காஸ்மி திங்கள்கிழமை விலகினார்.

    இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளேன். அதனால், கட்சியில் இருந்து விலகுகிறேன். இப்போது கட்சியை 5 பேர் கொண்ட குழுதான் நடத்தி வருகிறது. பணக்காரர்களுக்குத்தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குல் பனாக், மீரா சன்யால், ஆசுதோஷ், ராஜ் மோகன் காந்தி உள்ளிட்டவர்களுக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். 16 லட்சம் மக்கள் உள்ள தொகுதியில் அவர்களைவிட சிறந்த வேட்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லையா?

    ஆம்ஆத்மி கட்சியும், அதில் அங்கம் வகிக்கும் பிரசாந்த் பூஷணும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீûஸ மட்டுமே தாக்கி குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். டாடா குழுமத்தை பற்றி எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்காதது ஏன்? நீரா ராடியா வெளியிட்ட டேப் ஆதாரங்களில் ரத்தன் டாடா சிக்கியுள்ளபோதிலும், அதுபற்றி ஆம்ஆத்மி தரப்பில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் எழுப்பப்படவில்லை. கேஜரிவால் 1989 முதல் 1992-ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தில் பணியாற்றி வந்ததுதான் அதற்குக் காரணம்.

    அதேபோல், நக்ஸல் இயக்கத் தலைவர்களையும் கேஜரிவால் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் அவர்களை வேட்பாளர்களாகவும் நிறுத்தியுள்ளார். முசாஃபர்நகர் பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கேஜரிவால் பேசாததும், குமார் விஸ்வாஸýக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் அவர் இணக்கமாக இருப்பதையே காட்டுகிறது என்றார் மக்சூத் அலி காஸ்மி.

    சமீபத்தில் இதே போன்ற கருத்தை தெரிவித்ததால்தான் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்த அஸ்வினி உபாத்யாய கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai