Enable Javscript for better performance
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

    By புது தில்லி  |   Published on : 29th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், வெற்றி அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் அக் கட்சியினர் மீது தேர்தல் ஆணையத்தில் அத் தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.பி.விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக புது தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக அமைச்சர் டி.கே. சின்னையா உத்தரவின் பேரில், அதிமுகவைச் சேர்ந்த காஞ்சிபுரம் உள்ளூர் பிரதிநிதி காஞ்சி கே.பரிமளம், நகர்ப் பகுதியில் பேனர்கள் வைத்துள்ளார். அதில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாகத் தெரிவிக்கப்

    பட்டுள்ளது.

    வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை. ஆனால், முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாகவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போன்று, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக நாளிதழ் செய்தி மூலம் தெரியவந்தது. ஆனால், தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 25-ஆம் தேதி இரு விதமான தகவல்களை அளித்தார்.

    இதேபோன்று, ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் அதிமுகவினரால் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 200 வழங்கப்பட்டதாக உள்ளூர் நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் புகார் அளிக்க தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், பண விநியோகம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து புகார் வந்ததையடுத்து, ஆளும்கட்சியினர் பணம் விநியோகம் செய்யும் வகையில் பறக்கும் படையினரும் விலக்கிக் கொள்ளப்பட்டனர்' என்று மனுவில் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai