Enable Javscript for better performance
செந்தமிழ்ப் பேரவையின் சித்திரை விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஸ்ரீதேவி ரமேஷ், முத்துலட்சுமி மாரி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் வி.என். தக்ஷிணாமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாரதிய மஹிளா வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான உஷா அனந்த சுப்ரமணியன் பங்கேற்று மீனா வெங்கியின் சமூக சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெüரவித்தார்.

    கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு தில்லி தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ரமாமணி சுந்தர் பரிசுகள் வழங்கினார். தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா. முகுந்தன், இணைச் செயலாளர் கெüரி இளங்கோவன், தில்லி முத்தமிழ்ப் பேரவைத் தலைவர் கே.வி.கே.பெருமாள், செயலர் கண்ணன், அவ்வை தமிழ்ச் சங்க நிர்வாகி கிருஷ்ணமாச்சாரி, ஹயக்ரீவா அமைப்பின் தலைவர் குருசரண், செந்தமிழ்ப் பேரவைத் தலைவர் ம. ரமேஷ், செயலாளர் அ.மாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா நிகழ்வுகளை கிரிஜா அசோக், சரவணன் ஆகியோர் தொகுத்தளித்தனர். செந்தமிழ்ப் பேரவைப் பொருளாளர் ஏ.எம். ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai