Enable Javscript for better performance
தீ விபத்துகளை தடுக்க உடனடி நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லியில் தொடர்ந்து தீவிபத்துகள் ஏற்பட்டு வருவதை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

    தில்லி வசந்த் குஞ்ஜ் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கவும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 206 இடங்களில் தீவிபத்து நிகழ்ந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தில்லி ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை துறைத் தலைவர், தில்லி காவல் துணை ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இக் கூட்டத்தில், குடிசைப் பகுதிகளில் தீவிபத்து ஏற்படாமல் இருப்பதைத் தடுக்க, செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விதிமுறைகளை வகுப்பது குறித்தும் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai