Enable Javscript for better performance
தெற்கு தில்லி மாநகராட்சியில் அனுமதி பெறாத 22 கட்டடங்கள் இடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி மாநகராட்சியில் அனுமதி பெறாத 22 கட்டடங்கள் இடிப்பு

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அனுமதிபெறாத 22 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஒரு கட்டடம் சீல் வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தெற்கு தில்லி மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் மீது மாநகராட்சிக் கட்டடத் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, மாநகராட்சியின் மத்திய, மேற்கு, தெற்கு, நஜஃப்கர் ஆகிய மண்டலங்களில் அனுமதியின்றி கட்டடப்பட்ட 22 கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன. ஒரு கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    மத்திய மண்டலத்தில் ஹர்கேஷ் நகர், அம்ருத்புரி நகர், சராய் ஜூலியானா, கோட்லா முபாரக்பூர், ஜúஸாலா விஹார் ஆகிய பகுதிகளில் 9 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

    மேற்கு மண்டலத்தில் நியூ மஹாவீர் நகர், மாயாபுரி 2-ஆவது ஃபேஸ், ஹஸ்தல், ஓம் விஹார் பகுதிகளில் 8 கட்டடங்கள், தெற்கு மண்டலத்தில் பர்யாவரண் காம்ப்ளக்ஸ், சுல்தான்பூர், ஆயா நகர், சுல்தான்பூர் காலனி ஆகிய பகுதிகளில் 3 கட்டடங்கள், நஜஃப்கர் மண்டலத்தில் ராஜாபுரி-விஸ்வாஸ் பார்க், பிஜ்வாஸன் பகுதிகளில் 2 கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai