Enable Javscript for better performance
தொழிலதிபரின் மனைவி மர்ம சாவு:போலீஸ் விசாரணை - Dinamani

சுடச்சுட

    

    தொழிலதிபரின் மனைவி மர்ம சாவு:போலீஸ் விசாரணை

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     வடமேற்கு தில்லியில் தொழிலதிபரின் மனைவி மர்மமான முறையில் தூக்கில் இறந்த நிலையில் தொங்கியது சனிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து போலீஸார் கூறியது: வடமேற்கு தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சனா (24). 2009-ஆம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. 4 வயதில் குழந்தையும் உள்ளது.

    இந் நிலையில் சஞ்சனா, தன் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சனிக்கிழமை இரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சடலத்தை கைப்பற்றினர். வரதட்சிணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai