Enable Javscript for better performance
நீர் பங்கீடு பிரச்னைக்கு பொதுநல மனு தாக்கலா?: உச்ச நீதிமன்றம் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    நீர் பங்கீடு பிரச்னைக்கு பொதுநல மனு தாக்கலா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை பொதுநல மனுவின் கீழ் எவ்வாறு விசாரிக்க முடியும் என்று தில்லி, ஹரியாணா மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எனினும், இது தொடர்பாக தில்லி அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    தில்லி-ஹரியாணா மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பாக தில்லி அரசு தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்தது.

    அப்போது தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, "இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பங்கீடு பிரச்னையை பொதுநல மனு தாக்கல் செய்வதன் மூலம் எவ்வாறு விசாரிக்க முடியும்? நீர்ப் பங்கீடு பிரச்னைகளை விசாரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 131-ஆவது விதி வாய்ப்பு வழங்கியுளளது. அதன்படிதான் இப் பிரச்னைகளை அணுக வேண்டும். அதற்கு முரணாக இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வது பிரச்னையை திசைதிருப்புவதுபோல அமையும்' என்றார். பின்னர் மனு மீதான விசாரணையை தேதி மறுதேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி லோதா ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai