Enable Javscript for better performance
மாநிலங்களவை உறுப்பினர்களாக 4 அதிமுகவினர் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மாநிலங்களவை உறுப்பினர்களாக 4 அதிமுகவினர் பதவியேற்பு

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்மையில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட நான்கு அதிமுக உறுப்பினர்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

    இதையொட்டி தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் அலுவலகத்தில் திங்கள்கிழமை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதிமுக உறுப்பினர்கள் எஸ். முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, கே. செல்வராஜ், விஜிலா சத்யானந்த் ஆகியோருக்கு ஹமீது அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன் உடனிருந்தார். அதிமுக உறுப்பினர்களைத் தொடர்ந்து பதவியேற்றுக் கொண்ட மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் விவரம் வருமாறு (அடைப்புக் குறிக்குள் மாநிலம்):

    காங்கிரûஸ சேர்ந்த முரளி தேவ்ரா, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், மஜீத் மேமன் (மகராஷ்டிரம்), போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிஸ்வஜித் தைமரி, புவனேஸ்வர கலிதா (அசாம்), காங்கிரûஸ சேர்ந்த ரண்விஜய் பிரதாப் சிங் ஜுதேவ், மோதிலால் வோரா (சத்தீஸ்கர்), பாஜகவைச் சேர்ந்த சத்யநாராயண ஜதியா (மத்திய பிரதேசம்), ஹாஜி அப்துல் சலாம் (மணிப்பூர்), பாஜகவைச் சேர்ந்த ராம் நாராயண் தூதி (ராஜஸ்தான்).

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், அதிமுகவை சேர்ந்த நா. பாலகங்கா, திமுகவை சேர்ந்த ஏ.ஏ. ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோரின் பதவிக் காலம் கடந்த 2-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையொட்டி, காலியான ஆறு இடங்களுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக உறுப்பினர்கள் நான்கு பேர், திமுகவை சேர்ந்த திருச்சி சிவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    இந் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் மட்டும் தற்போது பதவியேற்றுக் கொண்டுள்ளனர். திருச்சி சிவா, டி.கே. ரங்கராஜன் ஆகியோர் மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன் கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது முறைப்படி பதவியேற்றுக் கொள்வர் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai