Enable Javscript for better performance
5 வயது சிறுவன் கடத்திக் கொலை: மாமா உள்பட 2 பேர் கைது - Dinamani

சுடச்சுட

    

    5 வயது சிறுவன் கடத்திக் கொலை: மாமா உள்பட 2 பேர் கைது

    By புது தில்லி,  |   Published on : 29th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் பணத்துக்காக 5 வயது சிறுவனை கடத்தி கொலை செய்ததாக அச் சிறுவனின் மாமா உள்பட இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

    இது குறித்து வடகிழக்கு தில்லி கூடுதல் காவல் ஆணையர் வி.வி.செüத்ரி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு தில்லி, கோகுல்புரி சாலையோரத்தில் சிறுவனின் சடலம் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அச் சிறுவன், காணாமல்போன உஸ்மான்பூரைச் சேர்ந்த முகேஷ் குப்தாவின் மகன் வாசு (5) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து, முகேஷ் குப்தாவின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் வீடுகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தனது மாமா அமித் குப்தா (எ) மோனு (30) பரிசளிக்க உள்ளதாகவும் அதைப் பெறச் செல்வதாகவும் வாசு கூறிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொழில் நிமித்தமாக அவருக்குப் பணம் தேவைப்பட்டுள்ளதால் சிறுவனை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு அவரது நண்பர் ஜாஃபராபாத் பகுதியைச் சேர்ந்த ரகுமான் (28) உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    சம்பவத்தின் போது அச் சிறுவன் தனது மாமா அமித் குப்தாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து குடிக்கச் செய்துள்ளார். மயக்கமடைந்த வாசுவை நண்பர் ரகுமான் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அப்போது வாசுவை மூச்சுத் திணற வைத்து ரகுமான் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சடலத்தை காரில் கொண்டு சென்று கோகுல்புரி சாலையோரத்தில் வீசியுள்ளதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து சிறுவனின் காலணி, சடலத்தை கொண்டு சென்ற கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார் செüத்ரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai