Enable Javscript for better performance
ஆட்டோ-லாரி மோதி விபத்து: உயிரிழந்த இளைஞரின் தாய்க்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆட்டோ-லாரி மோதி விபத்து: உயிரிழந்த இளைஞரின் தாய்க்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    By dn  |   Published on : 30th April 2014 12:49 AM  |   அ+அ அ-   |    |  

    லாரி மீது ஆட்டோ மோதியதில் உயிரிழந்த இளைஞரின் தாய்க்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.20 லட்சம் வழங்குமாறு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தில்லி மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விபத்து வழக்கு விவரம் வருமாறு: தில்லி வசந்த் குஞ்ஜ், ஹரிஜன் பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் முத்தாலீஃப் (23). தனியார் நிறுவனத்தில் ரூ.12,500 சம்பளத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2011, செப்டம்பர் மாதம் வெளியூரில் இருந்து வந்த தனது தாய் மாமனை அழைத்து வருவதற்காக தில்லியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்கு ஆட்டோவில் சென்றார். அவருடன் அஸ்மத் அலி என்பவரும் சென்றார்.

    ஆப்ரிக்கா அவென்யூ பகுதியில் உள்ள ஹயாத் மேம்பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவை ஓட்டிச் சென்ற முகம்மது முபாரக், அஸ்மத் அலி, முத்தாலீஃப் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மூவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஆட்டோ ஓட்டுநரும், முத்தாலீஃபும் உயிரிழந்தனர். அஸ்மத் அலி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

    ஆட்டோ ஓட்டுநரும், உரிமையாளருமான முகம்மது முபாரக் வேகமாகவும் கவனக் குறைவாகவும் ஓட்டிச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாகக் கூறி ஆட்டோவுக்கு காப்பீடு செய்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தரக் கோரி தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயத்தில் முத்தலீஃபின் தாய் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் "ஆட்டோவை அதன் ஓட்டுநர் முகம்மது வேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டிச் சென்றார். ஆட்டோவை மெதுவாக ஓட்டுமாறு முத்தாலீஃப் பலமுறை கேட்டும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால்தான் லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், முத்தலீஃப் உயிரிழக்கவும் நேரிட்டது.

    அவரது இறப்பால் குடும்ப வருவாய் முற்றிலும் நின்று போய்விட்டது' என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயத் தலைவர் கே.எஸ். மோஹி அளித்த தீர்ப்பு:

    "சம்பவத்தன்று ஆட்டோவை கவனக் குறைவாகவும், வேகமாகவும் ஓட்டிச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டு அப்துல் முத்தாலீஃப் உயிரிழக்க காரணமானது போலீஸார் அளித்த ஆவணங்கள், ஆட்டோவில் சென்ற அஸ்மத் அலியின் வாக்குமூலம் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆட்டோ ஓட்டுநர் முகம்மது முபாரக் தரப்பில் அவரது வாரிசுதாரர் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது தரப்பு நியாயத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால், ஆட்டோ ஓட்டுநரின் கவனக் குறைவும் வாகனத்தை வேகமாக ஓட்டியதும்தான் விபத்துக்குக் காரணம் என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே, விபத்தில் உயிரிழந்த முத்தாலீஃபின் தாய் பீபிமயானாவுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.20.09 லட்சத்தை ஆட்டோவுக்கு காப்பீடு செய்த நிறுவனம் வழங்க வேண்டும்' என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp