Enable Javscript for better performance
கலைஞர்களுக்கு அரசு உதவி- Dinamani

சுடச்சுட

    

    கலைஞர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தில்லி அரசு செய்து தரும் என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்தார்.

    புது தில்லி நகரின் நூற்றாண்டு விழாவையொட்டி, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சார்பில் ரஃபி மார்க்கில் உள்ள ஆர்ட் சொûஸட்டியில் ஓவியம், சிற்பங்கள் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், "பழமையான தில்லி நகரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந் நிலையில், புது தில்லியின் நூற்றாண்டு விழாவையொட்டி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஓவியம், சிற்பம் முதலானவற்றை உருவாக்கும் கலைஞர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்படுவார்கள்' என்றார்.

    என்டிஎம்சி தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், "புது தில்லியின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. அதுவரை மாதந்தோறும் கலாசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    அண்மையில் "புது தில்லி - அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 800 ஓவியர்கள் பங்கேற்றனர். அதில், சிறந்த ஓவியங்களை தீட்டிய 15 கலைஞர்களுக்கு நஜீப் ஜங் பரிசுகளை வழங்கினார்.

    நடன நிகழ்ச்சி: உலக நடன நாளையொட்டி, என்டிஎம்சி பள்ளி மாணவர்களுக்காக இரண்டு நாள் நடன விழாவை தால்கடோரா விளையாட்டு அரங்கில் என்டிஎம்சி செயலாளர் விகாஸ் ஆனந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். நவயுக் பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்கும் "பச்பன் கீ ஸ்வர்' சிம்ஃபொனி இசை புதன்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai