Enable Javscript for better performance
சூட்கேஸில் பொருள்கள் திருட்டு: ஏர் இந்தியா மீது சுங்க அதிகாரி புகார்- Dinamani

சுடச்சுட

    

    சூட்கேஸில் பொருள்கள் திருட்டு: ஏர் இந்தியா மீது சுங்க அதிகாரி புகார்

    By dn  |   Published on : 30th April 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூட்கேஸில் வைத்திருந்த ஐ-பேட், வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவை திருடு போனதால் "ஏர் இந்தியா' விமான நிறுவனம் மீது தில்லியில் பணியாற்றும் மத்திய சுங்கத் துறை அதிகாரி தீட்சித் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீஸார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லியை சேர்ந்தவரான தீட்சித், புறநகர் பகுதியில் உள்ள துக்ளகாபாத் இன்லேன்ட் கன்டெய்னர் டெப்போவில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வெளிநாட்டு விமானத்திலும் அங்கிருந்து மும்பை வழியாக தில்லிக்கு ஏர் இந்தியா விமானத்திலும் பயணம் செய்தார்.

    இப் பயணத்தின் போது, அமெரிக்காவில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அனைத்துப் பயணிகள் உடைமைகளுடன் அவரது சூட்கேஸýம் வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், நியூயார்க், மும்பை ஆகிய நகரங்கள் வழியாக தில்லி விமான நிலையத்தில் தீட்சித் தரையிறங்கினார். ஆனால், அந்த விமானத்தில் அவரது சூட்கேஸ் இல்லை. வேறொரு விமானத்தில் அவரது சூட்கேஸ் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, வேறு விமானத்தில் வந்த அவரது சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவர், உள்ளே பார்த்தபோது, தனது விலை உயர்ந்த ஐ-பேட், வெளிநாட்டு கரன்சிகள் காணாமல்போனது தெரியவந்தது.

    இதையடுத்து, சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் திருடு போனதாக ஏர் இந்தியா நிறுவனம் மீது அவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடைபெற்றுவருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக நாங்களும் விசாரித்துவருகிறோம். எங்கு, எப்படித் தவறு நடந்தது என்பதைக்  கண்டறிய முயற்சித்து வருகிறோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai