Enable Javscript for better performance
தலைநகரில் ஜூன் மாதம் மின் தேவை உயர வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    வரும் ஜூன் முதல் இரு வாரத்தில் தில்லியின் மின் தேவை அதிகபட்சமாக 6,100 மெகாவாட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தில்லி பிரதேச மின்துறை முதன்மைச் செயலர் அருண் கோயல் தெரிவித்தார்.

     இது குறித்து செய்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: தில்லியின் மின் தேவை தற்போதைய கோடை காலத்தில் ஜூன் முதல் இரு வாரங்களில் அதிகபட்சமாக 6,100 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிப்பதற்கான போதுமான ஏற்பாடுகளை மின் விநியோக நிறுவனங்கள் செய்துள்ளன.

    நடப்பாண்டில் ஏப்ரல் 28-ஆம் தேதி தில்லியின் அதிகபட்ச மின் சுமை 4,090 மெகாவாட்டாக இருந்தது. அப்போது, தேசிய தலைநகரில் மின் உற்பத்தி 649 மெகாவாட்டாக இருந்தது. மத்திய துறைகளின் மின் நிலையங்களில் இருந்து 3,441 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டது.

     6 மாதங்களுக்குப் பிறகு அதிகபட்ச மின் தேவை மீண்டும் 4 ஆயிரம் மெகாவாட்டைக்  கடந்துள்ளது. இந்த மின்தேவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.50 மணியளவில் 4,121 மெகாவாட்டாக அதிகரித்தது. 

    இந்த ஆண்டு ஏப்ரல் மாத்திற்கான மின் தேவை 4,200 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தற்போது மின் தேவை எதிர்பார்த்த அளவைவிட சற்றுக் குறைந்துள்ளது என்றார் கோயல்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai