Enable Javscript for better performance
தில்லி தமிழ்ச் சங்கத்தின் மே மாத நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்ச் சங்கத்தில் மே மாதத்தில் பல்சுவை, தமிழிசை, பரதநாட்டியம், சிறப்புப் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

    இது தொடர்பாக தில்லி தமிழ்ச் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஜய் டி.வி. புகழ் கூடல் கண்ணனின் பலகுரல், பல்சுவை நிகழ்ச்சி மே 3-ஆம் தேதி  மாலை 6.30 மணிக்கும், எம்.ஆர். ராமசாமி, ஜெயந்தி ரங்கராஜன் குழுவினர்களின் தமிழிசை மே 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ளது. 

    செüம்யா ராமமூர்த்தி குழுவினரின் இளைய பாரதம், அதைத் தொடர்ந்து பிரியா ராஜாமணியின் பரதநாட்டியம் மே 10-ஆம் தேதி மாலை 6.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். 

    "குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக அதிகம் விட்டுக்கொடுத்துப்போவது மருமகளே! மாமியாரே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் மே 11-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. பட்டிமன்றத்துக்கு நடுவராக ரமாமணி சுந்தர் செயல்படுவார்.

    மருமகளே என்று பவானி அனந்தராமன், கவிதா ரமேஷ், வீர வியட்நாம், காயத்ரி வைத்தியநாதன் ஆகியோரும் மாமியாரே என்று மீனா வெங்கி, தேன்மொழி முத்துக்குமார், கீதா ஸ்ரீதர், கெüரி இளங்கோவன் ஆகியோரும் வாதிடுகின்றனர்.

    வைஷ்ணவி விஸ்வநாத்தின் சிவ சிவ - பரதநாட்டிய நிகழ்ச்சி மே 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கும், ப்ரீதி சேதுராமன் குழுவினரின் தமிழிசை மாலை 7.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா குழுவினரின் "ஓம் நமசிவாய நாட்டிய நாடகம்' மே 17-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சென்னை வி. ஆனந்தராஜ் குழுவினரின் தமிழிசை மே 18-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும். மகாலட்சுமி ராஜன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி மே 24-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும். மே 25-ஆம் தேதி முற்பகல் 11 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் புத்தம் புதிய திரைப்படம் திரையிடப்படும்.

    கும்பகோணம் என். பத்மநாபன் மாணவர்களின் தாளவாத்திய நிகழ்ச்சி மே 31-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    தமிழ் வகுப்பு: 10 வயது மேற்பட்டவர்களுக்கான இலவச கோடைகால தமிழ் வகுப்புகள் மே 3-ஆம் தேதி தொடங்கவுள்ளன. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 9868777700 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai