Enable Javscript for better performance
நடமாடும் பல் மருத்துவ திட்டம்: இன்று அமல்- Dinamani

சுடச்சுட

    

    நடமாடும் பல் மருத்துவத் திட்டம் தலைநகரில் புதன்கிழமை (ஏப்ரல் 30) அமலுக்கு வருகிறது.

    மத்திய சுகாதாரத் துறையின் கீழ் உள்ள தேசிய சுகாதார இயக்கம், தில்லி அரசின் சுகாதார இயக்கம் ஆகியவை இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. 

    இதையொட்டி, தில்லி மெüலானா ஆசாத் பல் மருத்துவமனை கல்லூரியில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு தொடக்க விழா நடைபெறவுள்ளது. தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தலைமை தாங்குகிறார்.

    தில்லி தலைமைச் செயலாளர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா, தில்லி மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் என்.வசந்தகுமார், மெüலானா ஆசாத் பல் மருத்துவமனை கல்லூரி  இயக்குநரும், முதல்வருமான பேராசிரியர் மகேஷ் வர்மா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai