பிரதமர் அலுவலக அறையில் தீ
By dn | Published on : 30th April 2014 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புது தில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலக அறையில் செவ்வாய்க்கிழமை காலை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து தில்லி தீயணைப்பு துறையின் இயக்குநர் ஏ.கே. சர்மா கூறுகையில், "தில்லி சௌத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள அலுவலகத்தின் ஓர் அறையில் காலை 6.25 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது' என்றார்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அலுவலக அறையில் இருந்த கணினியின் யு.பி.எஸ். சாதனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. புகை படர்ந்ததும் தீப்பிடிப்பு குறித்த எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து, தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தக்க பொருள் சேதமோ காயமோ ஏதும் ஏற்படவில்லை' என்றார்.