Enable Javscript for better performance
பொதுமக்களின் புகார் மனுக்களில் 75% தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி அரசின் பொதுமக்கள் குறைதீர் கண்காணிப்பு பிரிவு மூலம் பெறப்பட்ட புகார் மனுக்களில் 75 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் குறைதீர் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் செயலர் ரவி தாதிக்  கூறியுள்ளதாவது:

    தில்லி பிரதேச அரசின் பொதுமக்கள் குறைதீர் கண்காணிப்பு பிரிவுக்கு இந்த ஆண்டு பிப்வரி 15 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை 3,573 புகார் மனுக்கள் வந்தன.

    ஆம்ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலான காலத்தில் 11,930 புகார் மனுக்கள் வந்தன.

    மொத்தம் 15,503 புகார் மனுக்களில் இதுவரை 11,650 (75%) மனுக்கள் மீது பகுதியாக அல்லது முழுமையாகத் தீர்வு காணப்பட்டுள்ளன. இவற்றில் 3,950 புகார் மனுக்கள், தொடர்புடைய துறைகளால் திருப்தி தெரிவிக்கப்பட்ட பிறகு முடித்து வைக்கப்பட்டுள்ளன.

    நிலுவையில் உள்ள புகார் மனுக்களில் 2,876-க்கும் அதிகமானவை ரொம்ப நாள்களாகத் தீர்வு காணப்படாமல் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காவல் துறை, ஜல் போர்டு, வடக்குத் தில்லி, தெற்கு தில்லி மாநகராட்சிகள், தில்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றில் உள்ளன.

    பொதுமக்களிடம் இருந்து புகார்களைப் பெறுவதற்காக தில்லி தலைமைச் செயலகத்தில் வரவேற்பு மையம் அருகே உதவிப் பிரிவு செயல்பட்டுவருகிறது.

    தலைமைச் செயலகத்தில் அறை எண்: 111பி-இல் புகார்தாரர்களிடம் தனிப்பட்ட முறையில் குறைகள் கேட்கப்படுகின்றன.

    புகார்தாரர்களுக்குத் திருப்தி ஏற்படாவிட்டால் அவர்களது குறைகள் துணைச் செயலர், கூடுதல் செயலர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். மேலும், தில்லி மக்களுக்காக இணையதளம் மூலம் புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மக்களின் குறைகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், துறைகளின் தலைவர்களுக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai